சாரதியின் கவனயீனத்தால் பலியான இரு உயிர்கள்

by Staff Writer 15-03-2022 | 7:45 AM
Colombo (News 1st) கலஹா - தெல்தோட்டை, பட்டியகம மேற்பிரிவு பிரதேசத்தில் நேற்று(14) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் பயணித்த கெப் வாகனம் பள்ளத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். தொலைபேசி கோபுர திருத்தப்பணிகளை மேற்கொண்டு மீண்டும் அலுவலகம் திரும்பும் போதே, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது. கம்பளை மற்றும் கண்டியை சேர்ந்த 35 மற்றும் 64 வயதான இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கெப் வாகன சாரதியின் கவனயீனமே வாகன விபத்திற்கான காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர். சடலங்கள் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.