தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடல் மீண்டும் ஒத்திவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடல் மீண்டும் ஒத்திவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடல் மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Mar, 2022 | 12:54 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று(15) மாலை இடம்பெறவிருந்த கலந்துரையாடல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடனான இந்த சந்திப்பு ஏற்கனவே இரு சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கூட்டமைப்பு உள்ளிட்ட 07 கட்சிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்