குறைந்த கமிஷனை வழங்கும் LankaPay அட்டைகள்

முன்னெப்போதும் இல்லாத ஒரு வீத குறைந்த கமிஷனை வழங்கும் LankaPay அட்டைகள்

by Staff Writer 14-03-2022 | 5:06 PM
Colombo (News 1st) நிதி உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் மற்றுமொரு மாபெரும் முன்னேற்றத்தை முன்னெடுத்து செயற்படும் இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பின் இயக்குனரான LankaClear நிறுவனமானது அதன் LankaPay அட்டைகள் மூலமான கொடுப்பனவு துறையில் புதிய அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. LankaPay அட்டைகளை வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளும் போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வீத கமிஷனை வழங்குகிறது. வியாபரத்தின் தன்மை மற்றும் வியாபாரத்தின் அளவுகோலைப் பொருட்படுத்தும் தற்போது பயன்படுத்தப்படும் ஏனைய அட்டைகளைப் போல் அல்லாது அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள வியாபாரிகள் LankaPay அட்டைகளை ஏற்கும்போது அவர்கள் ஒரு வீத கமிஷனை (MDR) அனுபவிக்க முடியும். தற்போதுள்ள அட்டை மூலமான கொடுப்பனவுகளுக்கான கமிஷன் சுமார் 3 வீதத்திலிருந்து 3.5 வீதம் வரையிலாகும். சில சந்தர்ப்பங்களில் இந்நிலை 7 வீதம் வரையில் அதிகமாகலாம். இதனால் பெரும்பாலான வியாபாரிகள் அட்டை மூலம் பணம் செலுத்துவதை தவிர்க்கின்றனர். அல்லது அதனை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகின்றனர். ஆகவே, அட்டை கொடுப்பனவுகள் என்பது பல தசாப்தங்களாக பணம் செலுத்தும் விருப்பத்தெரிவாக இருந்த போதிலும் நம் நாட்டில் இப் பரிமாற்றம் பிரசித்தி பெறுவதற்கு ஒரு முக்கிய தடையாக அவ்விடயம் உள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக LankaPay அட்டைதாரர்கள் அட்டையை வழங்கும் நிலையை அடையும் நேரத்தில், நாடு முழுவதிலுமுள்ள எந்த விற்பனை நிலையத்திலும் தங்கள் அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக LankaClear அதன் வணிக வலையமைப்பை விரிவுபடுத்த எண்ணியுள்ளது. கார்கில்ஸ் வங்கி, கொமர்ஷல் வங்கி, சிலோன் வங்கி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி போன்ற பல வங்கிகள் ஏற்கனவே 25,000 வியாபாரிகள் LankaPay அட்டைகளை ஏற்றுக் கொள்வதை செயற்படுத்திய முக்கிய பெறுநர்களாக இருக்கின்றனர். முக்கிய பெறுநர்களான மேற்கூறிய வங்கிகளின் வியாபாரிகள், கூடுதல் விலையின்றி ஒரு எளிய விற்பனைப் புள்ளி (PoS) முனையத்தை செயற்படுத்துவதன் மூலம் அதிகூடிய பயன்களைப் பெறலாம். அத்தோடு ஏனைய வியாபாரிகளும் மேலே குறிப்பிடப்பட்டவற்றுள் விருப்பமான முக்கிய பெறுநர் வங்கிகள் மூலமாக இணைந்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி மேலதிக சில வங்கிகளும் பெறுநர்களாக இணைந்துகொள்ள தயாராகவுள்ளனர். வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், வங்கிகள் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் நீண்ட கால தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தேசிய முயற்சியாக LankaPay தேசிய அட்டை திட்டத்தின் கீழ் LankaPay அட்டைகள் வழங்கப்படுகின்றமை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படுகிறது. JCB-இன் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் பங்காளராக இணைந்தே LankaPay அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. LankaPay வியாபார வலையமைப்பில் இணைவதன் மூலம், வியாபாரிகள் உள்நாட்டில் வழங்கப்படும் LankaPay அட்டைகளை மட்டும் ஏற்றுக்கொள்வதோடு நின்றுவிடாது, கூடுதல் செலவு அல்லது செயற்படுத்துவதற்கான முயற்சியோ இல்லாமல் உலகளவில் வழங்கப்பட்ட 140 மில்லியனுக்கும் அதிகமான JCB சர்வதேச அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் அதிக பயன்களையும் அனுபவிக்க முடியும். JCB சர்வதேச அட்டை கொடுப்பனவுகளுக்கு நிலையான MDR வழங்கப்படும். இந்த தேசிய முன்முயற்சியானது வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாது தேசிய பொருளாதாரத்திற்கும் பயனளிக்கிறது. இலங்கையில் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் வங்கிகள் என அனைவரும் இருந்தாலும், உள்நாட்டிலேயே பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட உள்நாட்டு அட்டை பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு வகையான கட்டணங்களுக்காக சர்வதேச அட்டை மூலமான கொடுப்பனவு இயக்குனர்களுக்கு வருடந்தோரும் சுமார் 10 பில்லியன் வரை இலங்கை செலுத்துகிறது. அனைத்து உள்நாட்டு LankaPay அட்டை பரிவர்த்தனைகளும் LankaPay வலையமைப்பினூடாக உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்படுகிறது. LankaPay அட்டை அறிமுகத்தின் மூலம் பூஜ்ஜிய அந்நியச் செலாவணியோடு இதை கணிசமாகக் குறைக்க LankaClear உத்தேசித்துள்ளது. LankaClear-இன் இந்த முயற்சியானது நாட்டில் அட்டை மூலமான கொடுப்பனவுகளை பிரபலப்படுத்துவதோடு பலதரப்பட்ட சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வங்கியமைப்பில் சில குறைவான வங்கிகளை ஈர்க்க உதவும் என்பதும் LankaClear-இன் திடமான நம்பிக்கையாகும். சர்வதேச தரத்திற்கு இணங்க கொடுப்பனவு அட்டை தொழில்துறை தரவு பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த PCI-DSS ver 3.2 சான்றிதழைப் பெற்ற நாட்டின் முதல் நிறுவனம் LankaClear நிறுவனமாகும். நாட்டின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பின் இயக்குனரான LankaClear-இன் பார்வையானது, ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு, அணுகக்கூடிய வசதி, பாதுகாப்பான மற்றும் வசதியான கொடுப்பனவு விருப்பங்களை வழங்குவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு அதிக மதிப்பை உருவாக்கி சாதாரணமாகவுள்ள ஒரு வியாபார நோக்கத்தை கடந்ததொன்றாக காணப்படுகின்றது. 2 தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட பயணத்தில் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கும் LankaClear நிறுவனம் பல கொடுப்பனவு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அதுமட்டுமன்றி நாட்டின் நிதித்துறைக்கு முக்கிய மைய உட்கட்டமைப்பை வழங்கி, நிதி சேவைகளை மலிவாகவும் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அணுகக்கூடிய வசதியாகவும் மாற்றுகிறது.