இரணைதீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

இரணைதீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

by Staff Writer 14-03-2022 | 3:24 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - இரணைதீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள 08 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த 8 இந்திய மீனவர்களும் படகுடன் கைது செய்யப்பட்டனர். குறித்த மீனவர்களுக்கு எதிராக பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி வௌிநாட்டு மீன்பிடிப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் தடை செய்யப்பட்ட இழுமை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று(14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட மீனவர்களுக்கு தலா 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட​ ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதவான் எஸ். லெனின்குமார் உத்தரவிட்டார். நிபந்தனை அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மிரிஹானை இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரி மோகன் தெரிவித்தார்.