தரம் 5 பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

by Staff Writer 14-03-2022 | 3:17 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 149 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் 148 புள்ளிகள் வெட்டிப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 146 புள்ளிகள் வெட்டிப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 147 புள்ளிகள் வெட்டிப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 145 புள்ளிகள் வெட்டிப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(13) வௌியாகின. அதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.DOENETS.LK என்ற இணைத்தளத்தின் ஊடாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை காண முடியும். கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 40 ஆயிரத்து 508 மாணவர்கள் தோற்றியிருந்தனர். பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான மேன்முறையீடுகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.