சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2022 | 2:45 pm

Colombo (News 1st) சவுதி அரேபியாவின் வௌிவிவகார அமைச்சர் பைசால் பின் பர்ஹான் அல் சவுட் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(14) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சருடன் இராஜதந்திரிகள் உள்ளிட்ட மேலும் 17 வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள குறித்த குழுவினர் வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்டோர் இன்று(14) மாலை நாட்டில் இருந்து புறப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்