English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Mar, 2022 | 4:01 pm
Colombo (News 1st) புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ, L.T.B. தெஹிதெனிய, எஸ். துரைராஜா, காமினி அமரசேகர உள்ளிட்ட குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பிரதிவாதிகளாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குண்டுத் தாக்குதலில் தமது இரு பிள்ளைகளை இழந்த நந்தன சிரிமான்ன, சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஜனத் விதானகே, சரத் இந்தமல்கொட, குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடமைகளை துறந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
08 Jun, 2022 | 03:23 PM
25 Feb, 2022 | 06:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS