இரணைதீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

இரணைதீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

இரணைதீவில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2022 | 3:24 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – இரணைதீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள 08 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த 8 இந்திய மீனவர்களும் படகுடன் கைது செய்யப்பட்டனர்.

குறித்த மீனவர்களுக்கு எதிராக பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி வௌிநாட்டு மீன்பிடிப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் தடை செய்யப்பட்ட இழுமை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று(14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட மீனவர்களுக்கு தலா 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட​ ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதவான் எஸ். லெனின்குமார் உத்தரவிட்டார்.

நிபந்தனை அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்,
மிரிஹானை இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரி மோகன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்