மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2022 | 2:40 pm

Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 2020 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய உயிரியல் பிரிவு மாணவர்கள் 1,974 பேர் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் மருத்துவ பீடத்திற்கு 1,961 மாணவர்களும் 2018 ஆம் ஆண்டில் 1,480 மாணவர்களும் இணைத்துக்காள்ளப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,500 வரை அதிகரிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்