மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

12, 13 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

by Staff Writer 12-03-2022 | 4:11 PM
Colombo (News 1st) அவசர பயன்பாட்டிற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளதாகவும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்றும் (12) நாளையும் (13) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, இன்று A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்கிடையில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினமும் நாட்டின் பல பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கிடையில் 1 மணி 15 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில், நாளை மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Power Interruption Schedule