மத்திய வங்கி ஆளுநரால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

by Staff Writer 12-03-2022 | 3:25 PM
Colombo (News 1st) ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் நாட்டிற்கு வௌியே வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் நாட்டிற்கு வௌியே வழங்கப்படும் சேவைகளுக்கு விடயத்திற்கேற்றவாறு, கப்பலேற்றும் அல்லது சேவை வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் ஏற்றுமதி பெறுகைகளை கட்டாயமாக பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிடைக்கப்பெறும் ஏற்றுமதி பெறுகைகளின் அனைத்து வருமானங்களும் இலங்கையின் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.