பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்

பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்க திட்டம்

by Staff Writer 12-03-2022 | 4:23 PM
Colombo (News 1st) பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பேரீச்சம்பழம் உட்பட 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது. எனினும், ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால், பேரீச்சம்பழத்திற்கான வரியை அறிவிடாதிருக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.