சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்: இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் 

by Staff Writer 12-03-2022 | 3:53 PM
Colombo (News 1st) திருகோணமலை - சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் NTPC நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 50 மெகாவாட் சோலார் பூங்காவை திறப்பதற்கான சாத்தியம் குறித்து, தனியார்- பொது கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.