by Staff Writer 12-03-2022 | 4:56 PM
Colombo (News 1st) சம்மாந்துறை - நைனா காடு பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் விறகு தேடிச்சென்ற சந்தர்ப்பத்தில், ஆற்றில் உடைந்து வீழ்ந்திருந்த யானை வேலி மூலம் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நைனா காடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர்களின் சடலங்கள் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.