ஶ்ரீ ராமர் பாலம் தொடர்பான மனு 22 -இல் பரிசீலனை

ஶ்ரீ ராமர் பாலத்தை தேசிய மரபுரிமையாக்க கோரும் மனு 22 ஆம் திகதி பரிசீலனை

by Staff Writer 11-03-2022 | 8:31 PM
Colombo (News 1st) ஶ்ரீ ராமர் பாலத்தை தேசிய மரபுரிமையாக அறிவிக்குமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரும் தனது மனு, இம்மாதம் 22 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.