வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதான அலுவலகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

by Staff Writer 11-03-2022 | 8:34 PM
Colombo (News 1st) பத்தரமுல்லையிலுள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பார்வையிட்டார். தொழிற்தகைமைவாய்ந்த பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வழிநடத்தும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார். தொழில் நிமிர்த்தம் வௌிநாடு செல்கின்ற தொழிலாளர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை விரைவில் நிவர்த்திப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விசேட கவனம் செலுத்தியுள்ளார்.