by Staff Writer 11-03-2022 | 5:47 PM
Colombo (News 1st) எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கான அழைப்பினை ஜனாதிபதி விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, காணாமல் போனவர்கள் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை, அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தவுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவானதன் பின்னர், அவரை முதன்முறையாக சந்தித்து கலந்துரையாடவிருப்பதையும் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார்.