விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 6 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 

விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 6 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 

விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 6 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2022 | 3:16 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள போலி கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் மற்றும் பிரதிவாதியின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால், இன்று வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இன்று அறிவித்தார்.

போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றத்தை புரிந்துள்ளதாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களம், சஷி வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்