மார்ச் 14 முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு 

மார்ச் 14 முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு 

மார்ச் 14 முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2022 | 5:04 pm

Colombo (News 1st) அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு
மார்ச் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான சுற்றுநிருபம் கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

COVID-19 தொற்று நிலைமையின் மத்தியில், பாடசாலைகளை நடத்திச்செல்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் தோன்றினால், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியின் பேரில் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்