பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

முதன்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களில் உயிரிழப்பு

by Bella Dalima 10-03-2022 | 4:46 PM
Colombo (News 1st) உலகில் முதன்முறையாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபா் செவ்வாய்க்கிழமை (08) உயிரிழந்தார். அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தை சோ்ந்தவா் டேவிட் பென்னட்டின் (57) இதயம் செயலிழக்கும் நிலையை எட்டியதால், கடந்த ஜனவரி 7 ஆம் திகதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மேரிலேண்ட் மருத்துவமனை தெரிவித்திருந்தது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில், டேவிட் பென்னட் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தாா். பல நாட்களுக்கு முன்பிருந்தே டேவிட் பென்னட்டின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் வேறு எவ்வித உறுதியான காரணங்களையும் கூறவில்லை.