தொழிற்சாலை கழிவிலிருந்து உரம் தயாரிக்க திட்டம்

செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க திட்டம்

by Staff Writer 10-03-2022 | 7:08 PM
Colombo (News 1st) இலங்கை சீனி நிறுவனத்திற்கு சொந்தமான செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை ஊடாக இயற்கை உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீனி உற்பத்தியின் போது வௌியேறும் கழிவுகளை சுற்றாடலுக்கு உகந்ததாக மாற்றி, அதனை இயற்கை உரமாக பயன்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் 40,000 மெட்ரிக் தொன் இயற்கை உரத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.