ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனி தனித்து போட்டியிடும்: நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனி தனித்து போட்டியிடும்: நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Mar, 2022 | 8:45 pm

Colombo (News 1st) அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று (10) நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற இந்த மாநாடு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

”அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். அது தொடர்பில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கூட்டமைப்பு அரசியலில் நாம் தனித்துப் போட்டியிட்டு பின்னர் எமது கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தரப்புடன் கூட்டமைப்பாக இணைந்து கொள்ள முடியும்”

என இதன்போது நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்