பால் மா விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

பால் மா விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

பால் மா விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2022 | 2:30 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தயாராகி வருகின்றது.

400 கிராம் பக்கெட் பால் மாவின் விலையை 120 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5,500 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பின்புலத்தில், பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர்த்து வேறு மாற்றுவழி இல்லையென அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் வினவியபோது, பால் மாவிற்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இறக்குமதியாளர்களினால் பால் மாவின் விலை நியாயமற்ற விதத்தில் அதிகரிக்கப்பட்டால், நுகர்வோருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்காக தலையிடுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்