நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 5 ஆம் திகதி

நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 5 ஆம் திகதி

நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 5 ஆம் திகதி

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2022 | 3:14 pm

Colombo (News 1st) அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் 06 பேருக்கு எதிராக நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அடுத்த மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) தீர்மானித்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் ஐவர் மற்றும் Corporate services நிறுவனத்திற்கு எதிராக சட்ட மா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் அவருக்கு சொந்தமான Corporate service நிறுவனம் வேறு நிறுவனமொன்றுடன் இணைந்து முன்னெடுத்த கொடுக்கல் வாங்கலின் போது சட்டவிரோதமாக 30 மில்லியன் ரூபா பணத்தை சம்பாதித்தமையூடாக, நிதி தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்