by Staff Writer 10-03-2022 | 7:03 AM
Colombo (News 1st) லிந்துலை - சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(09) மாலை 5.30 மணியளவில் குறித்த நபர் தொழிலிலிருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சென்கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.