27 இலங்கையர்கள் உக்ரைனில் இருந்து வௌியேற மறுப்பு

27 இலங்கையர்கள் உக்ரைனில் இருந்து வௌியேற மறுப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Mar, 2022 | 10:22 pm

Colombo (News 1st) 27 இலங்கையர்கள் உக்ரைனில் இருந்து வௌியேற மறுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் பேராசியரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.

உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர்களில் 15 பேர் மாணவர்கள் எனவும் ஏனைய 66 பேரில் 39 பேர் தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளதாகவும் G.L.பீரிஸ் கூறினார்.

அவ்வாறு வௌியேறியவர்கள் போலந்து, ருமேனியா, மோல்டோவா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், எஞ்சியுள்ள 27 இலங்கையர்கள் உக்ரைனிலிருந்து வௌியேற விரும்பவில்லை என G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதல் 14 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

ரஷ்யா உக்ரைனின் 5 நகரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்துள்ள பின்புலத்தில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் வௌிவிவகார அமைச்சர்கள் நாளை (10) துருக்கியில் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்