ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு பிணை

பேரறிவாளனுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது

by Bella Dalima 09-03-2022 | 5:20 PM
Colombo (News 1st) இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 32 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவிப்பதை சுட்டிக்காட்டிய  நீதிபதிகளான எல்.நாகேஸ்வரராவ், பீ.ஆர். கவை ஆகியோர் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளனர். சிறைத்தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றத்தால் பிணை வழங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்திய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், மனுதாரர் 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதை கருத்திற்கொண்டு அவருக்கு பிணை வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளனர். மாதாந்தம் முதலாவது வாரத்தில் ஜோலார்பேட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பேரறிவாளன் கையொப்பமிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 07 பேரில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.