by Staff Writer 08-03-2022 | 8:12 PM
Colombo (News 1st) நிலவும் கடினமான சூழ்நிலைக்கு மத்தியில், பொறுமையுடன் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
சர்வதேச தரப்பிற்கு ஏற்ப 10 சர்வதேச மொழிகளை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் திட்டமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தியனிய வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார பொருட்களை விநியோகிக்கும் செயற்பாட்டின் இரண்டாவது கட்டம் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் ICL Marketing நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற வர்த்தக நாமமான ஈவா தயாரிப்புகள் உள்ளிட்ட சுகாதார பொருட்களை கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் சாந்தி பகிரதன் வழங்கிவைத்தார்.
பெண் தொழில் முயற்சியாளர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்திப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.