மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வுகூடம் திறந்து வைப்பு

நாட்டின் முதலாவது மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வுகூடம் திறந்து வைப்பு

by Staff Writer 07-03-2022 | 3:13 PM
Colombo (News 1st) நாட்டின் முதலாவது மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வுகூடம் இன்று(07) திறந்து வைக்கப்படுவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு மற்றும் தாழ்நில மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தென் மாகாண காரியாலயத்தில் குறித்த ஆய்வுகூடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. புதிய கருவிகளுடன் கூடிய குறித்த ஆய்வுகூடத்திற்கு சமுத்திர மற்றும் கடல் சூழலில் காணப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் வகைகளை மதிப்பீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடல்நீர் மாதிரி மற்றும் கடலுக்கு அடியில் காணப்படும் மண்ணின் மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்துவதற்கு தேவையான புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களும் குறித்த ஆய்வுகூடத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.