by Staff Writer 07-03-2022 | 10:23 PM
Colombo (News 1st) கிண்ணியா - நடுவூற்று பகுதியில் இன்று(07) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று(07) மாலை நடைபெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதான இருவரே காயமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்திளார் தெரிவித்தார்.
T56 ரக துப்பாக்கியால் இவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.