by Staff Writer 07-03-2022 | 3:41 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கர்தினால் ஆண்டகை இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.