by Staff Writer 06-03-2022 | 3:02 PM
Colombo (News 1st) தென்மேல் வங்காள விரிகுடாவை அண்மித்து ஏற்பட்ட தாழமுக்கம், தமிழகம் நோக்கி நகர்வதுடன் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தாழமுக்கம் நேற்று(05) காங்கேசன்துறையில் இருந்து 320 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டிருந்தது.
அதன் காரணமாக வட மாகாணத்தில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வட மத்திய மாகாணத்திலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.