தந்தையும் மகனும் சென்ற இறுதிப்பயணம்

தந்தையும் மகனும் சென்ற இறுதிப்பயணம்

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2022 | 7:48 pm

Colombo (News 1st) வவுனியா – பூவரசங்குளம், குருக்களூர் பகுதியில் இன்று(06) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கிசென்ற தனியார் பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 54 வயதான தந்தையும் 14 வயதான மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மகன் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விபத்துடன் தொடர்புடைய பஸ் பிரதேச மக்களால் தாக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பிச் சென்றதுடன் பின்னர் பூவரசங்குளம் பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்