46/1 பிரேரணையை நிராகரிப்பதாக G.L.பீரிஸ் தெரிவிப்பு

46/1 பிரேரணையை நிராகரிப்பதாக G.L.பீரிஸ் ஐ.நா பேரவையில் தெரிவிப்பு 

by Staff Writer 05-03-2022 | 3:38 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டதொடரில் தெரிவித்துள்ளார். அந்த பிரேரணையில் 6 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சியங்களை சேகரிக்கும் விடையத்தை கடுமையாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதாரமற்ற விடயங்களை உள்ளடக்கி 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையினால், அதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் கூட்டத்தொடரில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.