யாழில் மாணவர்களுக்கான இயற்கை சித்திர போட்டி 

by Staff Writer 05-03-2022 | 8:21 PM
Colombo (News 1st) இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான இயற்கை சித்திர போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள Fox  விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பின்தங்கிய ஐந்து பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இயற்கை தொடர்பான ஓவியங்களை வரைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இயற்கையின்பால் ஆர்வம் கொண்ட 25 மாணவர்கள் இந்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டதுடன், அவர்கள் இயற்கை தொடர்பில் கொண்ட எண்ணத்தை கைவண்ணமாக்கினர். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இயற்கை சூழலுடன் ஒன்றித்து வாழ்வதோடு, மிருகங்கள் மற்றும் பறவைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த ஓவியப் போட்டி முன்னெடுக்கப்பட்டது.