by Bella Dalima 05-03-2022 | 8:17 PM
Colombo (News 1st) தவறான கருத்துகளே மக்கள் குழப்பமடைவதற்கு காரணம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ தெளிவாக கருத்து வௌியிட்டு, தமது நாட்டை ஒரு பாதையில் பயணிக்க செய்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், அரசியல்வாதிகள் போதிய தௌிவில்லாமல் சில விடயங்களை முன்வைக்கின்ற போது மக்கள் குழப்பமடைவதாக குறிப்பிட்டார்.
தேவையில்லாமல் உருவான வரிசைகளில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறினார்.
133 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நாரம்மல பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார்.