யாழில் அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழப்பு

யாழில் அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழப்பு

யாழில் அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2022 | 5:46 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை – கட்டுவன் மேற்கை சேர்ந்த 19 வயதான கட்டிடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயக்கமுற்ற நிலையில் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர், ஒரு சில மணித்தியாலங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டமையே உயிரிழப்பிற்கான காரணம் என யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்