2021-இல் தெங்கு சார் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் டொலர் வருமானம்

2021-இல் தெங்கு சார் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் டொலர் வருமானம்

2021-இல் தெங்கு சார் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் டொலர் வருமானம்

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2022 | 4:26 pm

Colombo (News 1st) இலங்கையில் கடந்த வருடம் (2021) தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

இதன் ஊடாக ஏற்றுமதி 26% அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள், தென்னை நார் உற்பத்திகள், தென்னை மட்டை உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில், உள்ளூர் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு பாரிய அளவில் கேள்வி நிலவுவதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்