by Staff Writer 04-03-2022 | 8:31 PM
Colombo (News 1st) பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதியாக நேற்று (03) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான கடிதம் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்கவினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கடிதத்தின் பிரதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணை தலைவர்களாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலயே யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கத்திற்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.