இலங்கை தொடர்பில் இன்று (04) கலந்துரையாடல்

இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம் குறித்து ஐ.நா பேரவையில் இன்று கலந்துரையாடல்

by Staff Writer 04-03-2022 | 8:23 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணத்திற்கு இன்று இலங்கை பதிலளிக்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் இம்முறை ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளனர்.