English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Mar, 2022 | 7:56 pm
Colombo (News 1st) நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதியை ஏற்படுத்திக்கொடுக்குமாறு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
போட்டித்தன்மையுடன் நெல் கொள்வனவு செய்து, போதுமானளவு நெல் கொள்ளளவை பேணுவதை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு-02 இல் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை காரியாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்தல், சேகரித்தல், விநியோகம் மற்றும் தட்டுப்பாடின்றி சந்தையில் நெல் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்வதே ஜனாதிபதியின் அவசர கண்காணிப்பு விஜயத்தின் நோக்கமாகும்.
நெல் கொள்வனவை துரிதப்படுத்துவதற்காக உதவி பிராந்திய முகாமையாளர்களாக பட்டதாரிகள் 40 பேரும் களஞ்சிய நடவடிக்கைகளுக்காக 200 அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
13 Feb, 2022 | 02:38 PM
15 Sep, 2021 | 10:27 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS