இந்திய மீனவர்கள் 6 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு 

இந்திய மீனவர்கள் 6 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு 

இந்திய மீனவர்கள் 6 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு 

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2022 | 4:08 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயணித்த படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்