2022 ஶ்ரீலங்கா வனிதாபிமான தேசிய மாநாடு இன்று (03) நடைபெற்றது

by Staff Writer 03-03-2022 | 8:27 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா வனிதாபிமான 2022-இற்கான தேசிய மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) நடைபெற்றது. கடந்த வருடத்தில் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும் , 09 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடளாவிய ரீதியில் ஆளுமை மிக்க பெண்களை அடையாளம் காண்பதற்கு வனிதாபிமான தவறவில்லை. இதனை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்குகளின் போது, பெண்களை ஊக்குவிக்கும் வகையிலான பல செயலமர்வுகளும் இடம்பெற்றன. நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட சவால்கள், பிணக்குகள் தொடர்பிலான ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன. சவால்களுக்கான தீர்வுகள் தொடர்பில் நிபுணர்களுடன் கலந்துரையாடுவதே இன்றைய செயலமர்வின் நோக்கமாகும். நாட்டிலுள்ள முன்னணி மகளிர் அமைப்புகள், கல்விசார் நிபுணர்கள், தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டளார்கள், கலைஞர்கள், மகளிர் விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மகளிர் மாநாட்டில் பங்​கேற்றிருந்தனர். இன்று முன்வைக்கப்பட்ட கருத்துகளும் யோசனைகளும் கொள்கை ரீதியாக ஐக்கிய நாடுகள் மற்றும் நாட்டின் மகளிர் விவகார அமைச்சிற்கு மகளிர் தினமான மார்ச் 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளன.