13 நீதிபதிகளுக்கு நியமன கடிதங்கள் கையளிப்பு

 13 மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜனாதிபதியால் நியமன கடிதங்கள் கையளிப்பு 

by Staff Writer 03-03-2022 | 3:34 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு  இன்று நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட நீதிபதிகளானA.G. அளுத்கே, R.R.J.U.D.K. ராஜகருணா, DM.C.S. குணசேகர, M. பிரபாத் ரணசிங்க, R.வெலிவத்தை, A. நிஷாந்த பீரிஸ், S.M.A.S. மஞ்சநாயக்க மற்றும் L.சமத் மதநாயக்க ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர, பிரதம நீதவான்களான R.M.S.P. சந்திரசிறி மற்றும் நீதவான்களான R.A.D.U.N.ரணதுங்க, G.L. பிரியந்த ஆகியோரும் இன்று நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதிகளில் அடங்குகின்றனர். அரச சிரேஷ்ட சட்டத்தரணிகளான V.M. வீரசூரிய மற்றும் H.D.D.N. ஹேவாவசம் ஆகியோரும் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாத்து, நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்தி, வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதை தடுப்பது தமது நோக்கமாகும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.