அமைச்சு பதவிகளில் இருந்து உதய கம்மன்பில, விமல் வீரவன்ச நீக்கம் 

by Staff Writer 03-03-2022 | 7:35 PM
Colombo (News 1st) உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் காமினி லொக்குகே எரிசக்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், அவர் வகித்த மின்சக்தி அமைச்சு பதவி பவித்ரா வன்னியாரச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்