தரம் 5 பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில்

தரம் 5 பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வௌியாகும் - கல்வி அமைச்சு

by Staff Writer 03-03-2022 | 9:25 AM
Colombo (News 1st) கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாட பெறுபேறுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. செயன்முறை பரீட்சைகளை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பெறுபேறுகளை வௌியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ஜே. தர்மசேன குறிப்பிட்டார். இதனிடையே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி நிறைவடையவுள்ளது.