சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 1 கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு விற்பனை

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 1 கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு விற்பனை

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 1 கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு விற்பனை

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2022 | 7:25 pm

Colombo (News 1st) நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த வருட இறுதி வரை ஒரு கிலோ சம்பா அரிசியை 128 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ 105 ரூபா வீதம் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் கூறியுனார்.

அரிசி விலை அதிகரித்துள்ள போதிலும், இந்த வருட இறுதி வரை, சதொச ஊடாக குறித்த விலைகளுக்கு உட்பட்டதாக 3 வகை அரிசிகளையும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, பண்டிகைக்காலத்தில் நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாகவும் சம்பா, நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி வகைகள் சதொச விலையிலேயே விநியோகிக்கப்படுமென வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்