3 ஆம் திகதி முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது; 5 ஆம் திகதி முதல் மின்வெட்டு இல்லை – காமினி லொக்குகே

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2022 | 6:24 pm

Colombo (News 1st) எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கூறினார். எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இன்றும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, நாளை முதல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருளுக்கு செலுத்த தேவையான டொலரை பெற்றுக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும், நிதி அமைச்சு மற்றும் துறைசார் நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்