ஆடை தயாரிப்பு ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு

ஆடை தயாரிப்பு ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு

by Staff Writer 02-03-2022 | 4:50 PM
Colombo (News 1st) இலங்கையின் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி வருமானம் கடந்த 5 வருடங்களை விட 488 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது தேசிய உற்பத்தியில் அதிகளவான பங்களிப்பினையும் அந்நியச்செலாவணி வீதத்தில் அதிகரிப்பினையும் வேலை வாய்ப்பினையும் அதிகரித்துள்ளதாக இணை ஆடை தொழிற்சங்க செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்தார். ஜனவரி மாத ஏற்றுமதி மூலம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது முன்னைய காலங்களிலும் பார்க்க 23% அதிகரிப்பாகும். 2021 டிசம்பர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் ஆடை ஏற்றுமதி மூலம் 5435.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.