மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

by Staff Writer 02-03-2022 | 1:07 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியின் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் நேற்றிரவு(01) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 03 இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த சிறிய ரக லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் குறித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய 02 இளைஞர்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.